/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரியில் இலவச எச்.பி.வி., தடுப்பூசி கவர்னர் கைலாஷ்நாதன் துவக்கி வைப்பு
/
புதுச்சேரியில் இலவச எச்.பி.வி., தடுப்பூசி கவர்னர் கைலாஷ்நாதன் துவக்கி வைப்பு
புதுச்சேரியில் இலவச எச்.பி.வி., தடுப்பூசி கவர்னர் கைலாஷ்நாதன் துவக்கி வைப்பு
புதுச்சேரியில் இலவச எச்.பி.வி., தடுப்பூசி கவர்னர் கைலாஷ்நாதன் துவக்கி வைப்பு
ADDED : மார் 01, 2026 05:29 AM

புதுச்சேரி: பெண்களைத் தாக்கும் கர்ப்பப்பை வாய்ப்புற்று நோயைத் தடுக்கும் வகையில், 14 வயதுக்கு மேற்பட்ட சிறுமிகளுக்கான இலவச எச்.பி.வி., தடுப்பூசி திட்டத்தைப் புதுச்சேரியில் கவர்னர் கைலாஷ்நாதன் நேற்று துவக்கி வைத்தார்.
இந்திய அளவில் பெண்களிடையே இரண்டாவது பெரிய பாதிப்பாகக் கருதப்படும் கர்ப்பப்பை வாய்ப்புற்று நோயை ஒழிக்க பிரதமர் மோடி ராஜஸ்தானின் அஜ்மீரில் இத்திட்டத்தை நேற்று காலை துவக்கினார். அதன் தொடர்ச்சியாகப் புதுச்சேரியிலும் இம்முகாம் துவங்கப்பட்டுள்ளது.
தனியார் மருத்துவமனைகளில் ஒரு டோஸ் ரூ. 4,000 வரை விற்கப்படும் இத்தடுப்பூசி, தற்போது அரசு மூலம் தகுதியுள்ள அனைத்துச் சிறுமிகளுக்கும் இலவசமாக வழங்கப்படுகிறது. 14 வயது முதல் 15 வயதுக்குட்பட்ட சிறுமிகள். இந்த தடுப்பூசி முகாம்கள் 3 மாதங்களுக்கு அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் சமுதாய நலவழி மையங்களில் அனைத்து வேலை நாட்களிலும் காலை 9:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும்.
3 மாதங்களுக்குப் பிறகு தடுப்பூசி. வியாழக்கிழமைகளில், குழந்தைகளுக்கு வழக்கமாக வழங்கப்படும். இந்நிகழ்ச்சியில் சபாநாயகர் செல்வம், சுகாதாரத் துறைச் செயலர் சவுத்திரி முகமது யாசின், இயக்குனர் செவ்வேள், தேசிய சுகாதார திட்ட இயக்குநர் கோவிந்தராஜன், பொது சுகாதாரத்துறை துணை இயக்குனர் சமிமுனிசா பேகம், குடும்ப நல்வழித்துறை துணை இயக்குனர் ஆனந்த லஷ்மி, தகவல், கல்வி மற்றும் தொடர்பு திட்ட துணை இயக்குனர் ரகுநாதன், தேசிய நோய் தடுப்பூசி திட்ட துணை இயக்குனர் உமாசங்கர், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் என, பலர் கலந்துகொண்டனர்.
இத்தடுப்பூசி மூலம் 99.7 சதவீத புற்றுநோய் பாதிப்பைத் தடுக்க முடியும் என்பதால், தகுதியுள்ள அனைவரும் இதைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

