தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ வில்லியனுார் தொகுதி மாஜி எம்.எல்.ஏ., மரணம்

 வில்லியனுார் தொகுதி மாஜி எம்.எல்.ஏ., மரணம்

 வில்லியனுார் தொகுதி மாஜி எம்.எல்.ஏ., மரணம்


ADDED : மார் 01, 2026 05:28 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 01, 2026 05:28 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வில்லியனுார்: வில்லியனுார் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ., வயது மூப்பின் காரணமாக நேற்று இறந்தார்.

புதுச்சேரி, வில்லியனுார், சுந்தரமூர்த்தி, விநாயகபுரம், மேற்கு பகுதியை சேர்ந்தவர் நாராயணசாமி, 74. இவர், நியூ இந்தியா டிராக்டர்ஸ் என்ற பெயரில் எச்.எம்.டி., டிராக்டர் டீலர்ஷிப் எடுத்து புதுச்சேரி மற்றும் தமிழகத்தில் டிராக்டர் விற்பனை செய்தார்.

இதனிடையே முன்னாள் அமைச்சர் கண்ணன் மூலம் தமது அரசியல் பயணத்தை துவங்கி, புதுச்சேரி மக்கள் காங்., கட்சி சார்பில், 2002ல் வில்லியனுார் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். பின், காங்., கட்சியில் இணைந்து மக்கள் பணியாற்றினர். 2006ல் நடந்த தேர்தலி காங்., கட்சியில் சீட் உறுதியான நிலையில், கடைசி நேரத்தில் சீட்டை மாற்றி கொடுத்ததால், சுயேச்சையாக வில்லியனுாரில் களமிறங்கி வெற்றி பெற்று, 2006 முதல் 2011 வரை எம்.எல்.ஏ.,வாகவும், வடிசாராய ஆலை சேர்மனாகவும் பணியை தொடர்ந்தார்.

எம்.எல்.ஏ., ஆன இரண்டு வருடத்தில் திடீர் என, உடல்நலம் பாதிக்கப்பட்டு, பக்கவாத நோயால் ஒரு கை மற்றும் கால் செயல் இழந்தது. தொடர்ந்து, ஏழை எளிய இளைஞர்கள் 150க்கும் மேற்பட்டோரை சாராய ஆலையில் பணியமர்த்தினார். வயது மூப்பின் காரணமாக நேற்று இறந்தார். நேற்று மாலை அவரது உடல் கோட்டைமேடு இடுகாட்டில் அடக்கம் செய்யப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us