/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கவர்னர் கைலாஷ்நாதன் தமிழ் புத்தாண்டு வாழ்த்து
/
கவர்னர் கைலாஷ்நாதன் தமிழ் புத்தாண்டு வாழ்த்து
ADDED : ஏப் 14, 2025 04:09 AM
புதுச்சேரி:புதுச்சேரி கவர்னர், முதல்வர் தமிழ் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
கவர்னர் கைலாஷ்நாதன் வாழ்த்து செய்தி;
தமிழ் மக்கள் அனைவருக்கும் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்களையும், மலையாள மொழி பேசும் மக்களுக்கு 'விஷு' மலையாள புத்தாண்டு வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
நம்முடைய பண்பாட் டையும் பாரம்பரியத்தையும் எடுத்துக்காட்டும் இந்த புத்தாண்டு கொண்டாட்டங்கள் அனைவரது வாழ்விலும் செழிப்பையும் மகிழ்ச்சியையும் கொண்டு வர வேண்டும். அன்பு, சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றை பகிர்ந்து கொண்டு புத்தாண்டை வரவேற்போம் என, தெரிவித்துள்ளார்.
அதே போல், முதல்வர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம், அமைச்சர்கள் நமச்சிவாயம், லட்சுமிநாராயணன், தேனீ ஜெயக்குமார், சாய் சரவணன்குமார், அரசு கொறடா ஆறுமுகம், காங்., தலைவர் வைத்தி லிங்கம், அ.தி.மு.க., மாநில செயலாளர் அன்பழகன், துணை செயலாளர் வையாபுரி மணிகண்டன், அ.தி.மு.க., உரிமை மீட்பு குழு செயலாளர் ஓம்சக்திசேகர், பா.ம.க., அமைப்பாளர் கணபதி, முன்னாள் எம்.எல்.ஏ., சாமிநாதன் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர்.