/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கிராமங்களில் கல்வித்தரம் மேம்பட வேண்டும் கவர்னர் கைலாஷ்நாதன் பேச்சு
/
கிராமங்களில் கல்வித்தரம் மேம்பட வேண்டும் கவர்னர் கைலாஷ்நாதன் பேச்சு
கிராமங்களில் கல்வித்தரம் மேம்பட வேண்டும் கவர்னர் கைலாஷ்நாதன் பேச்சு
கிராமங்களில் கல்வித்தரம் மேம்பட வேண்டும் கவர்னர் கைலாஷ்நாதன் பேச்சு
ADDED : மார் 30, 2025 03:14 AM
புதுச்சேரி: பள்ளிக் கல்வித்துறை சார்பில் ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு மற்றும் புதிய நியமன ஆணைகள் வழங்கும் விழாவில் கவர்னர் கைலாஷ்நாதன் பேசிய தாவது:
பள்ளிக் கல்வித் துறையில் ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு மற்றும் புதிய நியமன ஆணை வழங்கியது மகிழ்ச்சியளிக்கிறது. இது படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கித் தருவதில், அரசு மேற்கொள்ளும் முயற்சிகளை காட்டுகிறது.
ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும், முன்னேற்றத்திலும் நிச்சயமாக ஆசிரியரின் பங்கு இருக்கும். அதனால் ஆசிரியர்கள் அர்ப்பணிப்போடு பணியாற்ற வேண்டும். ஆசிரியர் பணி வேலை மட்டும் அல்ல, அது ஒரு சேவை. கல்வி, ஒழுக்கம், சமுதாய பொறுப்புணர்வு எல்லாவற்றிலும் அவர்கள் மாணவர்களுக்கு ஒரு முன் உதாரணமாக இருக்க வேண்டும்.
மாநிலத்தின் கல்வித் தரத்தை மேம்படுத்த மத்திய, மாநில அரசுகள் பலவிதமான முயற்சிகளை எடுத்து வருகின்றன. புதிய கல்விக் கொள்கையும் அதை ஒட்டியே உருவாக்கப்பட்டு இருக்கிறது. அதற்காக தற்போது புதுச்சேரியில் உள்ள பெரும்பாலான பள்ளிகள் சி.பி.எஸ்.இ., பள்ளிகளாக மாற்றப்பட்டு இருக்கிறது.
ஆனாலும் கிராமப் புறங்களில் கல்வித்தரம் இன்னும் மேம்பட வேண்டும். இன்று நியமனம் மற்றும் பதவி பெறும் ஆசிரியர்கள் அந்த பொறுப்பை தயங்காமல் ஏற்க வேண்டும்.
கிராமப்புற பள்ளிகளில் பணியாற்ற தயக்கம் காட்டக் கூடாது. அங்கு, கல்வித் தரத்தை உயர்த்த உங்களை அர்ப்பணிக்க வேண்டும். பாடப் புத்தகங்களை தாண்டி, அங்குள்ள மாணவர்களின் திறமைகளை வளர்க்க வேண்டும். அது மட்டும் அல்லாமல் அறிவியல், தொழில்நுட்பம் வளர்ச்சி அடைந்த இன்றைய சமுதாயத்தில் மாணவர்களின் தொழில்நுட்ப அறிவை மேம்படுத்த வேண்டும்' என்றார்.