தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/எரு தயாரிக்கும் திட்டம் கவர்னர் துவக்கி வைப்பு

எரு தயாரிக்கும் திட்டம் கவர்னர் துவக்கி வைப்பு

எரு தயாரிக்கும் திட்டம் கவர்னர் துவக்கி வைப்பு


UPDATED : அக் 06, 2026 12:00 AM

ADDED : அக் 05, 2026 08:26 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 06, 2026 12:00 AM ADDED : அக் 05, 2026 08:26 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: காலாப்பட்டு மத்திய சிறையில் காய்கறி கழிவிலிருந்து எரு தயாரிக்கும் திட்டத்தை கவர்னர் கைலாஷ்நாதன் துவக்கி வைத்தார்.

துாய்மை இந்தியா திட்டத்தின் கீழ், ‘துாய்மையே சேவை’ விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று காலாப்பட்டு மத்திய சிறையில் நடந்தது. கவர்னர் கைலாஷ்நாதன், துாய்மை திட்ட செயல்பாடுகளை துவக்கி வைத்தார். தாயின் பெயரில் மரம் நடும் திட்டத்தின் கீழ் மரக்கன்று நட்டார்.

தொடர்ந்து, காய்கறி கழிவுகள் மூலம் இயற்கை எரு தயாரிப்பு, வீடியோ கான்பிரன்ஸ் அறை, சிறை கைதிகளுக்கான கம்ப்யூட்டர் பயிற்சி திட்டங்களை துவக்கி வைத்தார்.

சிறை கைதிகளின் புனர்வாழ்வு செயல்பாடுகளின் கீழ் நடைபெறும் தோட்டப்பயிர் உற்பத்தி, மரம் வளர்ப்பு, கைவினை பயிற்சி குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்து, உற்பத்தி பொருட்களை பார்வையிட்டார்.

நிகழ்ச்சியில், தலைமைச் செயலரின் சிறப்பு அதிகாரி ராஜிவ்சுக்லா, உள்ளாட்சித் துறை இயக்குநர் ஆதர்ஷ் சிறைத்துறை ஐ.ஜி., மோகன் ஆகியோர் உடனிருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us