புதுச்சேரியில் போதையில் அட்ராசிட்டி ஆசாமிகளை அள்ளிய போலீஸ்
புதுச்சேரியில் போதையில் அட்ராசிட்டி ஆசாமிகளை அள்ளிய போலீஸ்
UPDATED : அக் 06, 2026 12:00 AM
ADDED : அக் 05, 2026 08:26 PM
புதுச்சேரி: புதுச்சேரியில் பல்வேறு இடங்களில் குடிபோதையில் ரகளையில் ஈடுபட்ட நபர்களை போலீசார் பிடித்து வழக்குப் பதிந்து கைது செய்தனர்.
அரியாங்குப்பம்
அரியாங்குப்பம் போலீசார் நேற்று முன்தினம் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, டோல்கேட் பகுதியில், குடிபோதையில் ரகளையில் ஈடுபட்ட அரியாங்குப்பம் நாகராஜ் மகன் அரிகரன், 32; டோல்கேட் தனியார் அப்பார்ட்மெண்ட் அருகே விஜயன் மகன் குமரேசன், 27; ஆகியோர் மீதும் வழக்குப் பதிந்து கைது செ்ய்தனர்.
தவளக்குப்பம்
தவளக்குப்பம் போலீசார் நேற்று முன்தினம் ரோந்துப் பணியில் ஈடுபட்டபோது, நல்லவாடு, குட்டியாண்டாவர் கோவில் அருகே குடிபோதையில், ரகளை செய்த ஜானகிராமன் மகன் குமரகுரு, 23; பூர்ணாங்குப்பம், அய்யனார் கோவில் அருகே தவளகுப்பம் கிருஷ்ணமூர்த்தி மகன் முகிலன், 32; தவளகுப்பம் கல்லுாரி அருகே சுப்ரமணி மகன் விஷ்ணு, 24; அபிேஷகப்பாக்கம் அன்னை கார்டன் பகுதியில், வஜ்ரவேல் மகன் விக்கி, 28; மெயின் ரோட்டில் தனியார் பார் அருகே புதுச்சேரி சேதுபாண்டியன் மகன் சூர்யா, 27; ஆகியோர் மீது வழக்குப் பதிந்து கைது செய்தனர்.
பாகூர்
பாகூர் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து சென்றபோது சோரியங்குப்பம் நவாத்தோப்பு பகுதியில் குடிபோதையில் ரகளை செய்த கடலுார் மாவட்டம் வேல்முருகன் மகன் சிலம்பரசன், மணமேடு ஏரிக்கரை பகுதியில், கடலுார் வீரப்பன் மகன் மாரியப்பன் ஆகியோர் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
கிருமாம்பாக்கம்
கிருமாம்பாக்கம் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது முள்ளோடை துறை மின் நிலையம் அருகே குடிபோதையில் அட்ராசிட்டி செய்த கடலுார் பாலன் மகன் கோபி, முள்ளோடை பரிக்கல்பட்டு ரோட்டில், கடலுார் ராஜேந்திரன் மகன் துரைராசு ஆகியோர் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
