தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/கவர்னரின் அதிரடி உத்தரவு சும்மா இருக்கும் டிரைவர்களுக்கு ‘செக்’

கவர்னரின் அதிரடி உத்தரவு சும்மா இருக்கும் டிரைவர்களுக்கு ‘செக்’

கவர்னரின் அதிரடி உத்தரவு சும்மா இருக்கும் டிரைவர்களுக்கு ‘செக்’

2


UPDATED : அக் 31, 2026 06:12 PM

ADDED : அக் 31, 2026 06:09 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 31, 2026 06:12 PM ADDED : அக் 31, 2026 06:09 PM

2


2
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி அரசுத் துறைகளில் செயலர்கள், இயக்குநர்கள் என, வி.ஐ.பி., ரக அதிகாரிகளின் அலுவல் ரீதியான பயணங்களுக்காக அரசு வாகனங்கள் ஒதுக்கப்படுவது வழக்கமான ஒன்று. கூடவே, பிரத்யேக அரசு டிரைவர்களும் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்.

ஆனால், சில அரசுத் துறைகளில் ஓட்டுவதற்கு காரே இல்லாத சூழலிலும், டிரைவர்கள் மட்டும் தினமும் ஆஜராகி, வேலையே இல்லாமல் டியூட்டி பார்த்து வருகின்றனர். இன்னொரு பக்கம், சில முக்கியமான துறைகளிலோ, டிரைவர்கள் பற்றாக்குறையால் அன்றாடப் பணிகளே பிரேக் போட்டு நிற்கின்றன.

ஒரு பக்கம் ஆளே இல்லை... இன்னொரு பக்கம் ஆள் இருந்து வேலையே இல்லை என்ற இந்த விசித்திரமான முரண்பாடு குறித்து கவர்னர் கைலாஷ்நாதனின் டேபிளுக்குப் புகார்கள் சென்று சேர்ந்தன. விஷயத்தைக் கேட்டதுமே சுதாரித்த கவர்னர், சற்றே கடுமையான தொனியில் உடனடியாக ஒரு உத்தரவைப் பிறப்பித்துள்ளார்

வாகனங்கள் இல்லாததால் வேலையின்றி இருக்கும் டிரைவர்களின் சேவைகளை, டிரைவர்கள் பற்றாக்குறையால் தவிக்கும் மற்ற அரசுத் துறைகளுக்கு உடனடியாகப் பயன்படுத்த வேண்டும் என, உத்தரவிட்டார்.

கவர்னரின் அதிரடி உத்தரவு வந்த அடுத்த கணமே, புதுச்சேரி பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத் துறை சுறுசுறுப்பானது. அரசுத் துறைகள், பொதுத்துறை நிறுவனங்கள், தன்னாட்சி அமைப்புகள், கழகங்கள், வாரியங்கள் எனப் புதுச்சேரியின் அனைத்துத் துறைகளிலும் உள்ள டிரைவர்களின் ஜாதகத்தைத் திரட்டத் தொடங்கியது.

உடனடியாக அனைத்து ஆணையர்களுக்கும், செயலாளர்களுக்கும் அவசர சுற்றறிக்கை பறந்தது. தங்கள் துறை அலுவலகங்களில் வாகன ஒதுக்கீடு இல்லாமல் சும்மா இருக்கும் டிரைவர்களின் முழு விவரங்களையும் உடனடியாகச் சமர்ப்பிக்க வேண்டும். எங்கள் துறையில் அப்படி யாரும் சும்மா இல்லை என்றால், சும்மா விட்டுவிட முடியாது. யாருமில்லை என்பதைக் குறிக்கும் 'பூஜ்ஜிய அறிக்கையை கட்டாயம் தாக்கல் செய்ய வேண்டும். தகவல்களைத் தனித்தனியாக அனுப்பிக் குழப்பாமல், துறைவாரியான ஒரே ஒருங்கிணைந்த அறிக்கையாக மட்டுமே அனுப்ப வேண்டும்.

இந்த விவகாரத்தை மிகவும் அவசரம் என வகைப்படுத்தியுள்ள அரசு, தேவையான அனைத்து தகவல்களையும் வரும் 10ம் தேதிக்குள் பணியாளர் துறைக்கு அனுப்பக் கெடு விதித்துள்ளது.

மேலும், அந்த அறிக்கையின் மென்படியை usgad@py.gov.in என்ற அதிகாரப்பூர்வ மின்னஞ்சல் முகவரிக்கு உடனே தட்டிவிட வேண்டும் என்றும் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கவர்னரின் இந்த அதிரடி மூவ், புதுச்சேரி அரசு வட்டாரங்களில் இப்போது ஹாட் டாபிக்..

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us