/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சாதனை போலீசாருக்கு கவர்னர் பாராட்டு
/
சாதனை போலீசாருக்கு கவர்னர் பாராட்டு
ADDED : நவ 22, 2024 05:48 AM

புதுச்சேரி: புதுச்சேரியில் சாதனை புரிந்த போலீசாருக்கு பதக்கம் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை கவர்னர் கைலாஷ்நாதன் வழங்கினார்.
புதுச்சேரி ெஹரிடேஜ் ரவுண்ட் டேபிள் சார்பில், காக்கி உடை வீரர்கள் விழா, முதலியார்பேட்டை பகுதியில் நடந்தது. விழாவில் கவர்னர் கைலாஷ்நாதன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். தொடர்ந்து, சிறப்பாக பணியாற்றி பல்வேறு சாதனைகளை புரிந்த போலீசாருக்கு பதக்கம் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கி கவுரவித்தார்.
விழாவில் அமைச்சர் நமச்சிவாயம், சம்பத் எம்.எல்.ஏ., டி.ஜி.பி., ஷாலினி சிங், ஐ.ஜி., அஜித்குமார் சிங்ளா, டி.ஐ.ஜி.,கள் சத்திய சுந்தரம், பிரிஜேந்திரகுமார் மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.