sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பள்ளி மாணவர்களுக்கு 'லேப் டாப்' கவர்னர், முதல்வர் வழங்கல்

 பள்ளி மாணவர்களுக்கு 'லேப் டாப்' கவர்னர், முதல்வர் வழங்கல்

 பள்ளி மாணவர்களுக்கு 'லேப் டாப்' கவர்னர், முதல்வர் வழங்கல்


ADDED : பிப் 14, 2026 04:36 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 14, 2026 04:36 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நெட்டப்பாக்கம்: புதுச்சேரி அரசு பள்ளி கல்வித்துறை சார்பில், அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கும் நிகழ்ச்சி, ஏம்பலம் மறைமலையடிகள் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடந்தது. அரசு செயலர் கிருஷ்ண மோகன் வரவேற்றார். கல் வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் தலைமை தாங்கினார்.

கவர்னர் கைலாஷ்நாதன், முதல்வர் ரங்கசாமி ஆகியோர் மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கி திட்டத்தினை துவக்கி வைத்தனர்.

விழாவில் சபாநாயகர் செல்வம், துணை சபாநாயகர் ராஜவேலு, அமைச்சர் திருமுருகன், எம்.எல்.ஏ.,க் கள், லட்சுமிகாந்தன், பாஸ்கர், அரசு செயலர் கிருஷ்ணகுமார் உட்பட பலர் பங்கேற்றனர். விழாவில் 2022-23 கல்வியாண்டில் பிளஸ் 2 படித்த மாணவர்களுக்கும், 2025-26ம் கல்வியாண்டில் பிளஸ் 1 பயிலும் மாணவர்கள் என, 15 ஆயிரத்து 783 மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கப்பட உள்ளது.

இதன் முதற்கட்டமாக ஏம்பலம் மறைமலையடிகள் அரசு மேல்நிலைப் பள்ளி, நெட்டப்பாக்கம் கம்பன் அரசு மேல்நிலைப் பள்ளி, கோர்க்காடு அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் 702 பேருக்கு லேப்டாப் வழங்கப்பட்டது. மீதமுள்ள மாணவர்களுக்கு வரும் மார்ச் மாதத்திற்குள் வழங்கப்பட உள்ளது.

பள்ளி கல்வி இயக்குனர் சிவகுமார் நன்றி கூறினார். இணை இயக்குனர் சிவகாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us