தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/விரைவாக நீதி கிடைக்க நடவடிக்கை: கவர்னர் தமிழிசை உறுதி

விரைவாக நீதி கிடைக்க நடவடிக்கை: கவர்னர் தமிழிசை உறுதி

விரைவாக நீதி கிடைக்க நடவடிக்கை: கவர்னர் தமிழிசை உறுதி


ADDED : மார் 08, 2024 06:47 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 08, 2024 06:47 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி : புதுச்சேரி சிறுமியின் கொலை வழக்கு சம்பந்தமாக, கவர்னர் தமிழிசை, காவல்துறை உயர் அதிகாரிகளுடன், கவர்னர் மாளிகையில், நேற்று அவசர ஆலோசனை நடத்தினார்.

இதில், போலீஸ் டி.ஜி.பி., சீனிவாஸ், டி.ஐ.ஜி., சின்ஹா, எஸ்.எஸ்.பி.,க்கள் அனிதா ராய், கலைவாணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இது தொடர்பாக அவர் முதல்வருக்கு கடிதம் ஒன்றை எழுதி உள்ளார். அதில், 'மனதிற்கு மிகவும் வருத்தம் அளிக்கக்கூடிய சிறுமியின் மரணம் ஒட்டுமொத்தமான சமுதாயத்தின் மனசாட்சியையும் உலுக்கி இருக்கிறது.

மூத்த காவல்துறை அதிகாரிகளை கொண்ட சிறப்பு விசாரணை குழுவிடம் இந்த வழக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது.ஒரு சிறப்பு தடையவியல் குழுவின் பங்களிப்பும் இந்த விசாரணையை விரைவுபடுத்த துணையாக இருக்கும்.

விரைவாக நீதி கிடைக்க வேண்டும் என்று பொது மக்களின் உச்சபட்ச எதிர்பார்ப்பினை ஏற்று அனைவரும் இணைந்து பணியாற்ற வேண்டும்.

இதன் மூலமாக நிர்வாகத்தின் மீதும், நீதி அமைப்பின் மீதும் மக்களுக்கான நம்பிக்கையை உறுதிப்படுத்தி சட்டம்- ஒழுங்கு நிலையை நிலை நாட்ட முடியும்,' என தெரிவித்துள்ளார்.

இதையடுத்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

தமிழகத்தில் பிடிபட்டு இருக்கும் சாதிக் என்பவரின் கூட்டாளிகள் இங்கே சில பேர் புதுச்சேரியில் இருந்து சில அரசியல் கட்சிகளுடன்,தொடர்புடையவர்களாக இருக்கின்றனர். அப்படிப்பட்டவர்களை உடனே கண்டுபிடித்து இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும்.

விரைவு நீதிமன்றத்தில் இந்த வழக்கு மிக விரைவாக விசாரணை செய்து குற்றவாளிகள் முழுமையாக நிரூபிக்கப்பட்டு உச்சபட்ச தண்டனை பெற்றுத் தர வேண்டும் என்பது எனது குறிக்கோள்.

குற்ற சம்பவம் தொடர்பாக, டி.என்.ஏ., பரிசோதனைக்கு அனுப்பப்பட்டிருக்கிறது. அதிலிருந்து சரியான முடிவுகள் வரவேண்டும். சட்ட ரீதியாக முழுமையான ஆதாரங்கள் கிடைத்த பிறகே நம் நடவடிக்கை எடுக்க முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us