/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மெழுகு சிற்ப கலைஞர்களுக்கு கவர்னர் தமிழிசை பாராட்டு
/
மெழுகு சிற்ப கலைஞர்களுக்கு கவர்னர் தமிழிசை பாராட்டு
மெழுகு சிற்ப கலைஞர்களுக்கு கவர்னர் தமிழிசை பாராட்டு
மெழுகு சிற்ப கலைஞர்களுக்கு கவர்னர் தமிழிசை பாராட்டு
ADDED : பிப் 01, 2024 05:17 AM

புதுச்சேரி: பொம்மை மியூசியத்தை பார்வையிட்ட கவர்னர் தமிழிசை, மெழுகு சிற்ப கலைஞர்களுக்கு பாராட்டு தெரிவித்தார்.
புதுச்சேரி ஒயிண்ட் டவுன் சுய்ப்ரேன் வீதியில் டூப்ளக்ஸ் ஓட்டல் பின்புறம் வில்லா குஹாவில் ஒண்டர்ஸ் ஆப் ஒய்ட் டவுன் என்ற பெயரில் பொம்மை மியூசியம் அமைந்துள்ளது. இது சுற்றுலா பயணிகளை கவர்ந்து வருகிறது. லைவ் ஆர்ட் மியூசியம், டெடி மியூசியம் மற்றும் பிஷ் மியூசியம் என மூன்று பிரத்யேக அருங்காட்சியகங்கள் இதில் இடம் பெற்றுள்ளன.
இங்குள்ள டெடி மியூசியத்தில் 195 நாடுகளின் பாரம்பரிய மிக்க உடைகளில் 500 டெடி பொம்மை மறு உருவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்த மியூசியத்தில் உள்ள பொம்மை கண்காட்சியை கவர்னர் தமிழிசை நேற்று பார்வையிட்டார்.
அரவிந்தர், அன்னை மெழுகு சிலைகளுடன் நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டார். மெழுகு பொம்மைகளின் நேர்த்தியை கண்டு வியந்த கவர்னர், மெழுகு சிற்ப கலைஞர் ஸ்ரீதரை உள்ளிட்ட கலைஞர்களுக்கு பாராட்டு தெரிவித்தார்.
இங்குள்ள பிஷ் மியூசியத்தில் நீருக்கடியில் உள்ள எண்ணற்ற உயிரினங்களை தழுவி உருவாக்கப்பட்ட சிற்பங்கள் வைக்கப்பட்டுள்ளன. மெழுகு சிலை சிற்பங்கள், கொண்ட லைவ் ஆர்ட் மியூசியத்தில் உலகின் பிரபல தலைவர்களான மகாத்மா காந்தி, அப்துல் கலாம், மதர் தெரேசா, ரவீந்திரநாத் தாகூர், விளையாட்டு வீரர் தோனி உள்ளிட்ட பலர் தத்ரூபமாக இருக்கும் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன.
உலகின் மிக உயரமான மனிதர் மற்றும் குள்ளமான மனிதர்களின் சிலிகான் சிலைகளும் இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.