/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
முன்னாள் அமைச்சர் மீதான புகார் கவர்னர் நேரடி விசாரணை
/
முன்னாள் அமைச்சர் மீதான புகார் கவர்னர் நேரடி விசாரணை
முன்னாள் அமைச்சர் மீதான புகார் கவர்னர் நேரடி விசாரணை
முன்னாள் அமைச்சர் மீதான புகார் கவர்னர் நேரடி விசாரணை
ADDED : ஆக 22, 2025 03:41 AM
புதுச்சேரி:முன்னாள் அமைச்சர் மீது புகார் கூறிய, பிரெஞ்சு குடியுரிமை பெற்ற முதியவரை, கவர்னர் நேரில் அழைத்து விசாரணை நடத்தி, புகார் குறித்து விசாரிக்க எஸ்.பி.,க்கு உத்தரவிட்டுள்ளார்.
புதுச்சேரி, பெருமாள் கோவில் வீதியை சேர்ந்தவர் மூர்த்தி பால்ராஜ்,75; பிரெஞ்சு குடியுரிமை பெற்ற இவருக்கு, அம்பலத்தடையார் மடத்து வீதியில் 2,200 சதுர அடியில் வணிக வளாகத்தில், கீழ் தளத்தை, தி.மு.க.,வை சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஒருவர் குத்தகை அடிப்படையில் நகைக்கடை நடத்தி வருகிறார்.
குத்ததை காலம் முடிந்த நிலையில், மூர்த்தி பால்ராஜ் கடையை காலி செய்ய கூறினார். ஆனால் முன்னாள் அமைச்சர் கடையை காலி செய்யாமல் மிரட்டியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து கடந்த டிசம்பர் மாதம் பெரியக்கடை போலீசில் புகார் அளித்தும், நடவடிக்கை எடுக்கவில்லை என முதியவர் மூர்த்தி பால்ராஜ் நேற்று முன்தினம் பேட்டியளித்தார்.
இதுகுறித்து நேற்று 'தினமலர்' நாளிதழில் வந்த செய்தியை பார்த்த கவர்னர் கைலாஷ்நாதன், பேட்டியளித்த முதியவர் மூர்த்தி பால்ராஜை நேரில் வரவழைத்து, புகார் குறித்து விசாரணை நடத்தினார். தொடர்ந்து, தனது பாதுகாப்பு அதிகாரியான எஸ்.பி., மாறனிடம், புகார் குறித்து விசாரித்து 24 மணி நேரத்தில் தகவல் தெரிவிக்க உத்தரவிட்டார்.
கவர்னரின் இந்த அதிரடி நடவடிக்கை போலீஸ் வட்டாரத்தில் மட்டுமன்றி அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.