/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற கவர்னர்
/
அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற கவர்னர்
ADDED : ஜன 23, 2025 05:13 AM

புதுச்சேரி: புதுச்சேரி கவர்னர் கைலாஷ்நாதனுக்கு காய்ச்சல் ஏற்பட்ட நிலையில், அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.
கவர்னர் கைலாஷ்நாதனுக்கு சமீபத்தில் பல் வலி ஏற்பட்டது. கோரிமேடு, அரசு பல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். அதேபோல அவரது குடும்பத்தினருக்கு உடல் சரியில்லாமல் போனால், அரசு மருத்துவமனைகளிலேயே சிகிச்சைக்கு செல்கிறார்.
இந்நிலையில் நேற்று அவருக்கு சளி மற்றும் காய்ச்சல் அறிகுறி ஏற்பட்டது. இதனால் அவர், புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு திடீரென வந்தார்.
அங்கு டாக்டர்கள் அவருக்கு 'எக்ஸ்ரே' பரிசோதனை மேற்கொண்டனர். தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளித்து மாத்திரைகளை வழங்கினர். இதையடுத்து அவர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

