/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அதிகாரத்திற்கு ஆசைப்பட்டு பதவிக்கு வரவில்லை காஷ்மீர் மாணவர்களுடன் கவர்னர் உருக்கம்

ADDED : நவ 12, 2024 07:32 AM

புதுச்சேரி: புதுச்சேரிக்கு சுற்றுலா வந்த காஷ்மீர் மாணவர்கள், கவர்னர் கைலாஷ்நாதனை சந்தித்து கலந்துரையாடினர்.
பாரத் தர்ஷன் சுற்றுலாத் திட்டத்தின் கீழ் புதுச்சேரி சுற்றுலா வந்துள்ள காஷ்மீர் பகுதியை சேர்ந்த 25 மாணவர்கள் கொண்ட குழுவினர், ரபிக் கமது, பாலமுருகன் ஆகியோர் தலைமையில் ராஜ்நிவாசில் கவர்னர் கைலாஷ்நாதனை சந்தித்து கலந்துரையாடினர். புதுச்சேரியின் சிறப்புகள், வரலாறு, பண்பாடுகளை பற்றி விளக்கினார். தொடர்ந்து, மாணவர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார்.
கலந்துரையாடலில் கவர்னர் கைலாஷ்நாதன் பேசியதாவது:
நான் அதிகாரத்திற்கு ஆசைப்பட்டு இந்த பதவிக்கு வரவில்லை. நம்மால் முடிந்தவரை சாமானிய மக்களுக்கு உதவ வேண்டும் என்ற மனப்பான்மையோடு வந்திருக்கிறேன்.
நான் வசதியான குடும் பத்தில் பிறந்தவன் இல்லை. சாதாரண குடும்பத்தில் இருந்து வந்ததால், சாமானிய மக்களின் துன்பங்கள், பிரச்னைகள், பசியை புரிந்து கொள்ள முடிந்தது.
நீங்கள் திறமைகளை வளர்த்துக் கொண்டு கஷ்மீரின் வளர்ச்சிக்கும் அதன் மூலமாக நாட்டில் வளர்ச்சிக்கும் பாடுபட வேண்டும்.
காஷ்மீரின் பழம் பெருமையை நிலைநாட்ட அனைவரும் ஒன்றுபட்டு அர்ப்பணிப்போடு செயல்பட வேண்டும் என்றார்.