/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கவுசிக பாலசுப்ரமணியர் கோவிலில் கவர்னர் தரிசனம்
/
கவுசிக பாலசுப்ரமணியர் கோவிலில் கவர்னர் தரிசனம்
ADDED : பிப் 12, 2025 03:57 AM

புதுச்சேரி,: தைப்பூசத்தை முன்னிட்டு கவுசிக பாலசுப்ரமணியர் கோவிலில் கவர்னர் கைலாஷ்நாதன் குடும்பத்துடன் சுவாமி தரிசனம் செய்தார்.
புதுச்சேரி முருகன் கோவில்களில் தைப்பூச விழா நேற்று நடந்தது. ரயில் நிலையம் அருகே உள்ள வள்ளி தேவசேனா உடனுறை கவுசிக பாலசுப்ரமணிய சுவாமி கோவிலில், தைப்பூசத்தை முன்னிட்டு, சிறப்பு அபிஷேக, ஆராதனையுடன் பூஜைகள் நடத்தது. கவர்னர் கைலாஷ்நாதன் மற்றும் அவரது குடும்பத்தினர் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
இதேபோல், கதிர்காமம் கதிர்வேல் சுவாமி கோவிலில் நடந்த தைப்பூச விழாவில், சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.தைப்பூசத்தை முன்னிட்டு புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளில் பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கினர்.

