/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மீனவ பெண்களுடன் கவர்னர் கலந்துரையாடல்
/
மீனவ பெண்களுடன் கவர்னர் கலந்துரையாடல்
ADDED : ஆக 12, 2025 01:44 AM
காரைக்கால்: காரைக்காலில் மத்திய அரசு திட்டமான கடற்பாசி உற்பத்தியை விரிவடைவது குறித்து நேற்று மீனவ பெண்களுடன் புதுச்சேரி கவர்னர் கைலாஷநாதன் காணொலி காட்சி மூலம் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது.
காரைக்கால் மாவட்ட நிர்வாகம் சார்பில் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் பிரதமர் மோடி கனவு திட்டமான மீனவமக்களின் கடற்பாசி வளர்ப்பு திட்டம் தொடங்கப்பட்டது.இதில் மகளிர் சுய உதவி குழுக்கள் மூலம் கடற்பாசி உற்பத்தியை விரிவடைய செய்து கடற்கரையோர மக்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கப்பட்டது. மேலும் அறுவடை செய்யப்படும் கடற்பாசிகள் உணவுப் பொருளாகவும், அழகு சாதன பொருட்கள்,தொழில்துறை மற்றும் மருத்துவ பயன்பாட்டிற்கு என பல விதங்களில் பயன்படுத்தப்படுகிறது.
இத்திட்டம் காரைக்கால் மாவட்டத்தில் பட்டினச்சேரி மற்றும் கருக்காளாச்சேரி ஆகிய மீனவ கிராம பெண்களுக்கு கடற்பாசி பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தை மத்திய கடல் வள ஆராய்ச்சி நிறுவனத்திற்கு புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் தலா இரு மீனவ கிராமங்களுக்கு ரூ.50 லட்சம் மதிப்பில் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டது.
நேற்று கடற்பாசி சாகுபடி செய்யும் மீனவ பெண்களுடன் புதுச்சேரி கவர்னர் கைலாஷ்நாதன் காணொலி மூலமாக கலந்துரையாடினார்.
இந்நிகழ்ச்சியில் புதுச்சேரி கவர்னரின் செயலர் மணிகண்டன்,கலெக்டர் குலோத்துங்கன்,மீன்வளத்துறையின் இயக்குநர் முகமது இஸ்மாயில், இணை இயக்குநர் தெய்வசிகாமணி, துணை ஆட்சியர் அர்ஜுன் ராமகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

