/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அரசு மருத்துவமனை ஒப்பந்த துாய்மை பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்
/
அரசு மருத்துவமனை ஒப்பந்த துாய்மை பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்
அரசு மருத்துவமனை ஒப்பந்த துாய்மை பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்
அரசு மருத்துவமனை ஒப்பந்த துாய்மை பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்
ADDED : செப் 28, 2024 05:30 AM

புதுச்சேரி : அரசு மருத்துவமனையில் ஒப்பந்த துாய்மை பணியாளர்கள் வேலை நிறுத்தம் செய்து நேற்று உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
புதுச்சேரி அரசு பொதுமருத்துவமனையில் துாய்மை பணிகள் அவுட்சோர்சிங் மூலம் நடக்கிறது. கடந்த 3 ஆண்டுகள் துாய்மை பணி ஒப்பந்தம் எடுத்த தனியார் நிறுவனத்தின் ஒப்பந்த காலம் நாளை மறுநாளுடன் முடிகிறது.
இதனால் இந்த துாய்மை பணியை புதிதாக டஸ்டர் டோட்டல் சொலுஷன் என்ற தனியார் நிறுவனம் ஒப்பந்தம் எடுத்துள்ளது. புதிய தனியார் நிறுவனம் அக். 1ம் தேதி முதல் துாய்மை பணியை மேற்கொள்ள உள்ளது. இதற்காக அன் நிறுவனம் துாய்மை பணியாளர்களுக்கு நேர்காணல் நடத்தி வருகிறது.
அரசு பொதுமருத்துவமனையில் பழைய தனியார் நிறுவனத்தில் பணியாற்றி ஒப்பந்த ஊழியர்கள் 92 பேர் தங்களுக்கு மீண்டும் பணி, அரசு நிர்ணயித்த குறைந்தபட்ச கூலி வழங்க வேண்டும் என நேற்று பணிகளை புறக்கணித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக எதிர்கட்சி தலைவர் சிவா பங்கேற்று பேசினார். சுகாதாரத்துறை இயக்குநர் (பொறுப்பு) செவ்வேலிடம், டெண்டர் எடுத்துள்ள புதிய நிறுவனம், பழைய ஆட்களையும் பணியில் சேர்த்து கொள்ள வேண்டும் அல்லது டெண்டரை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.