தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ஜிப்மரில் நாளை மறுதினம் பட்டமளிப்பு விழா

ஜிப்மரில் நாளை மறுதினம் பட்டமளிப்பு விழா

ஜிப்மரில் நாளை மறுதினம் பட்டமளிப்பு விழா


UPDATED : நவ 19, 2026 08:09 PM

ADDED : நவ 19, 2026 07:58 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 19, 2026 08:09 PM ADDED : நவ 19, 2026 07:58 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: ஜிப்மர் ஆடிட்டோரியத்தில் நாளை மறுதினம் நடக்கும் 15வது பட்டமளிப்பு விழாவில் மத்திய அமைச்சர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்க உள்ளார்.

ஜிப்மர் 15வது பட்டமளிப்பு விழா நாளை மறுதினம் (21ம் தேதி) அப்துல்கலாம் ஆடிட்டோரியத்தில் நடக்கிறது. மத்திய சுகாதார அமைச்சர் நட்டா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்குகிறார்.

கவர்னர் கைலாஷ்நாதன், முதல்வர் ரங்கசாமி, அமைச்சர் நமச்சிவாயம், மல்லாடி கிருஷ்ணாராவ், எம்.பி.,க்கள் செல்வகணபதி, வைத்திலிங்கம், அரசு கொறடா ஆறுமுகம் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.

ஜிப்மர் தலைவர் சித்ரா சர்க்கார் தலைமை தாங்குகிறார். இயக்குனர் வீர் சிங் நேகி ஜிப்மர் நிறுவன அறிக்கையை சமர்ப்பிக்கிறார். விழாவில் மொத்தம் 816 மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட உள்ளன. 88 பேருக்கு பதக்கங்கள் வழங்கப்பட உள்ளன.

மத்திய அமைச்சர் வருகையையொட்டி, ஜிப்மர் வளாகம், விழா நடைபெற உள்ள அப்துல்கலாம் ஆடிட்டோரியம் உள்ளிட்ட பகுதிகள் அழகு படுத்தும் பணி வேகமாக நடந்து வருகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us