தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மணக்குள விநாயகர் செவிலியர் கல்லுாரியில் பட்டமளிப்பு விழா

 மணக்குள விநாயகர் செவிலியர் கல்லுாரியில் பட்டமளிப்பு விழா

 மணக்குள விநாயகர் செவிலியர் கல்லுாரியில் பட்டமளிப்பு விழா


ADDED : பிப் 23, 2026 04:22 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 23, 2026 04:22 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரி மணக்குள விநயகர் செவிலியர் கல்லுாரியின் பட்டமளிப்பு விழா நடந்தது.

விழாவிற்கு புதுச்சேரி மத்திய பல்கலைக்கழக தேர்வுக் கட்டுப்பாட்டாளர் சதானந்த் சுவாமி தலைமை தாங்கி, 200 இளங்கலை மற்றும் முதுகலை மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார்.

மணக்குள விநாயகர் கல்வி நிறுவனத் தலைவர் தனசேகரன், செயலாளர் நாராயணசாமி கேசவன் முன்னிலை வகித்தனர்.

பொருளாளர் ராஜராஜன், மணக்குள விநாயகர் மருத்துவ கல்லுாரி மற்றும் மருத்துவமனை இயக்குனர் (பொறுப்பு) கார்த்திகேயன், மருத்துவ கண்காணிப்பாளர் பிரகாஷ், ஆராய்ச்சி டீன் சஞ்சய், கல்லுாரி முதல்வர் முத்தமிழ்செல்வி உட்பட பலர் பங்கேற்றனர். பேராசிரியர் பிரியதர்ஷினி அறிமுக உரை வழங்கினார்.

விழாவில், இளங்கலை பட்டப்பிரிவில் புதுச்சேரி பல்கலைகழக அளவில் 2017-21ல் முதல் மதிப்பெண் பெற்ற சதீஷ்குமார், 2018-22 ஆண்டு பயின்று முதல் மதிப்பெண் பெற்ற கலைஸ்ரீ, 2019-23 ஆண்டு முதல் மதிப்பெண் பெற்ற தாலிர்மதி, 2020- 24 ஆண்டு முதல் மதிப்பெண் பெற்ற கோகுலஸ்வாமி, 2021- 25 ஆண்டு முதல் மதிப்பெண் பெற்ற சிவசங்கரி, முதுகலை பட்டப்பிரிவில் 2021-23 ஆண்டு முதல் மதிப்பெண் பெற்ற அபிநயா ஆகியோருக்கு சிறப்பு சான்றிதழ் வழங்கப்பட்டது.

கல்லுாரி துணை முதல்வர் நர்மதா நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us