/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அரியூர் வெங்கடேஸ்வரா கல்லுாரி மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா
/
அரியூர் வெங்கடேஸ்வரா கல்லுாரி மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா
அரியூர் வெங்கடேஸ்வரா கல்லுாரி மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா
அரியூர் வெங்கடேஸ்வரா கல்லுாரி மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா
ADDED : ஜூலை 19, 2025 01:08 AM

வில்லியனுார்: அரியூர் வெங்கடேஸ்வரா மருத்துவ கல்லுாரி வளாகத்தில் உள்ள பாராமெடிக்கல், பிசியோதெரபி, நர்சிங் கல்லுாரி மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா நடந்தது.
ராமச்சந்திரா கல்வி குழும சேர்மன் ராமச்சந்திரன், அறக்கட்டளை நிறுவனர் ராதா குத்துவிளக்கு ஏற்றி விழாவை துவக்கி வைத்தனர். நர்சிங் கல்லுாரி பேராசிரியர் ஜமுனா வரவேற்றார்.
புதுச்சேரி பல்கலைக்கழக துணை வேந்தர் பிரகாஷ் பாபு, மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி பேசியதாவது:
உடல் தசைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிசியோதெரபி சிகிச்சை முறை, பாராமெடிக்கல் என, தனித்தனி சிகிச்சையாக மருத்துவத்தை பயன்படுத்தி குணப்படுத்தி வருகின்றனர். பட்டம் பெறும் மாணவர்கள் சிறந்த மருத்துவ உலகத்தை உருவாக்கி ஏழை, எளிய மக்களுக்கு சேவையாற்ற முன்வரவேண்டும்' என்றார்.
விழாவில் கல்வி குழும அறக்கட்டளை நிர்வாகிகள் ராஜுகிருஷ்ணா, மவுஷ்மி, முதன்மை இயக்க அதிகாரி வித்யா, மருத்துவக் கல்லுாரி இயக்குனர் ரத்தினசாமி, பொதுமேலாளர் சவுந்தரராஜன் வாழ்த்துரை வழங்கினர்.
நர்சிங் முதல்வர் மல்லிகா, பிசியோதெரபி முதல்வர் ஜெயந்தி, பாராமெடிக்கல் முதல்வர் ஆனந்தவைரவேல் ஆண்டறிக்கை வாசித்தனர். நர்சிங் கல்லுாரி துணை முதல்வர் ராஜேஸ்வரி உறுதி மொழி வாசித்தார். விழாவில் இந்திராணி நர்சிங், பாராமெடிக்கல், பிசியோதெரபி கல்லுாரிகளில் பயின்ற 200க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு இளங்கலை மற்றும் முதுகலை பட்டங்கள் வழங்கினர். பரணிதரன் நன்றி கூறினார்.