ADDED : ஜன 22, 2024 12:53 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருக்கனுார் : மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்துக்கு உட்பட்ட கிராம பஞ்சாயத்துகளில் குடியரசு தினத்தையொட்டி, கிராம சபை கூட்டம் வரும் 26ம் தேதி நடக்கிறது.
கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் எழில்ராஜன் செய்திக்குறிப்பு:
உள்ளாட்சித்துறை அறிவுறுத்தலின்படி, மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்தை சேர்ந்த 18 கிராம பஞ்சாயத்துகளில் குடியரசு தினத்தை முன்னிட்டு, வரும் 26ம் தேதி காலை 9:30 மணி முதல் 11:00 மணி வரை கிராம சபை கூட்டம் நடக்கிறது.
இதில், பொதுமக்கள் பங்கேற்று கிராமத்திற்கு தேவையான அடிப்படை வசதிகள், கிராம வளர்ச்சிக்கான ஆலோசனைகளை, கிராம சபை கூட்டத்தில் முன்வைத்து தீர்மானமாக நிறைவேற்றலாம். அப்பணிகளை செய்ய தேவையான கருத்துரு அரசுக்கு அனுப்பப்பட்டு, நிதி பெற்று நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அதில், கூறப்பட்டுள்ளது.