/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அரியாங்குப்பம் பஞ்சாயத்தில் 15ம் தேதி கிராமசபை கூட்டம்
/
அரியாங்குப்பம் பஞ்சாயத்தில் 15ம் தேதி கிராமசபை கூட்டம்
அரியாங்குப்பம் பஞ்சாயத்தில் 15ம் தேதி கிராமசபை கூட்டம்
அரியாங்குப்பம் பஞ்சாயத்தில் 15ம் தேதி கிராமசபை கூட்டம்
ADDED : ஆக 06, 2025 09:06 AM
அரியாங்குப்பம் : அரியாங்குப்பம் கொம் யூன் பஞ்சாயத்துக்குட்பட் ட 14 பஞ்சாயத்துக்களின், வரும் 15ம் தேதி, கிராம சபை கூட்டம் நடக்கிறது.
இதுகுறித்து, கொம்யூன் ஆணையர் ரமேஷ் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு:
சுதந்திர தினத்தை முன்னிட்டு, வரும் 15ம் தேதி, காலை 10:00 முதல் 11:00 மணி வரை கிராம கூட்டம் நடக்கிறது. அதில், அரியாங்குப்பம் மேற்கு பஞ்சாயத்து, பி.சி.பி. நகர், சமுதாய நலக்கூடம், கிழக்கு பஞ்சாயத்து கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகம் எதிரில் கிராமசபை கூட்டம் நடக்கிறது.
மேலும், ராதாகிருஷ்ணன் நகர், கிராம பஞ்சாயத்து அலுவலகம், வீராம்பட்டினம் செங்கழுநீர் அம்மன் கோவில், மணவெளி புருேஷாத்தமன் சமுதாய நலக்கூடம், தவளக்குப்பம் போலீஸ் ஸ்டேஷன் எதிரில், மேல்நிலை நீர்தேக்க தொட்டி அருகில், பூரணாங்குப்பம் பெரிய மந்தை, நல்லவாடு சமுதாய நலக்கூடம், அபிேஷகப்பாக்கம் அம்பேத்கர் சமுதாய நலக்கூடம், டி.என்., பாளையம் சமுதாய நலக்கூடம் உட்பட 14 பஞ்சாயத்துகளில் கிராம சபை கூட்டம் நடக்கிறது.
பொதுமக்கள் கலந்து கொண்டு, தங்கள் பகுதியில் உள்ள பிரச்னைகளை, துறை அதிகாரிகளிடம் தெரிவிக்கலாம்.
இவ்வாறு ஆணையர் தெரிவித்துள்ளார்.