/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
நாளை கிராம சபை கூட்டம் பாகூர் ஆணையர் அழைப்பு
/
நாளை கிராம சபை கூட்டம் பாகூர் ஆணையர் அழைப்பு
ADDED : ஆக 14, 2025 01:12 AM
பாகூர் : பாகூர் கொம்யூனுக்கு உட்பட்ட கிராம பஞ்சாயத்துக்களில் நாளை 15ம் தேதி நடைபெறும், கிராம சபை கூட்டத்தில் பங்கேற்க, பொதுமக்களுக்கு ஆணையர் சதாசிவம் அழைப்பு விடுத்துள்ளார்.
அவரது செய்திக்குறிப்பு:
பாகூர் கொம்யூன் பஞ்சாயத்துக்கு உட்பட்ட அனைத்து கிராம பஞ்சாயத்துக்களிலும் நாளை (15ம் தேதி) சுதந்திர தினத்தையொட்டி சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது.
காலை 9:30 மணிக்கு பின்னாட்சிக்குப்பம் பெரியபாளையத்து அம்மன் கோவில், கிருமாம்பாக்கம் வீரன்கோவில், காட்டுக்குப்பம் அரசு ஆரம்ப பள்ளி, மதிகிருஷ்ணாபுரம் பெருமாள் கோவிலில் கிராம சபை கூட்டம் நடக்கிறது.
காலை 10:00 மணிக்கு, குருவிநத்தம் ராஜிவ்காந்தி திருமண மண்டபம், ஆராய்ச்சிகுப்பம் அரசு பள்ளி, பனித்திட்டு ் கலையரங்கத்திலும் நடக்கிறது.
காலை 10:30 மணிக்கு கரையாம்புத்துார் அரசு தொடக்கப் பள்ளி, சின்னகரையாம்புத்துார் நாச்சியப்பன் கோவில் திடல், சோரியாங்குப்பம் செங்கழுநீர் அம்மன் கோவில் வளாகம், பாகூர் கமலா நேரு திருமண மண்டபம் மற்றும் பூலோக மாரியம்மன் கோவில் திடல், சேலியமேடு மாரியம்மன் கோவில் திடல், காலை 11:30 மணிக்கு கன்னியக்கோவில் பச்சைவாழியம்மன் கோவிலில் கிராம சபை கூட்டம் நடக்கிறது.
இக்கூட்டங்களி,் கிராம வளர்ச்சித் திட்டங்களில் தொடர்புடைய அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொள்ளவதால், கிராம மக்கள் கூட்டத்தில் பங்கேற்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

