நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெட்டப்பாக்கம்: நெட்டப்பாக்கம்கொம்யூன் மூலம் 11கிராம ஊராட்சிகளில் வரும் 15ம் தேதிகிராம சபைக் கூட்டம் நடக்கிறது.
இதுகுறித்து ஆணையர் ரமேஷ் செய்திக் குறிப்பு:
உள்ளாட்சித் துறையின் அறிவுறுத்தலின்படி, நெட்டப்பாக்கம்கொம்யூனைச் சேர்ந்த 11கிராம ஊராட்சிகளில் 78வது சுதந்திர தினத்தை முன்னிட்டு வரும் 15ம் தேதி காலை 10:00 மணிக்குகிராம சபைக் கூட்டம் நடக்கிறது.
அந்தந்த கிராம ஊராட்சிகளைச் சேர்ந்த பொதுமக்கள் பங்கேற்று, தங்கள் கிராமத்திற்கு தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் கிராம வளர்ச்சிக்கான ஆலோசனைகளை தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு செய்திகுறிப்பில் கூறப்பட்டுள்ளது.