/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அரியாங்குப்பம் கொம்யூனில் 26ம் தேதி கிராம சபை கூட்டம்
/
அரியாங்குப்பம் கொம்யூனில் 26ம் தேதி கிராம சபை கூட்டம்
அரியாங்குப்பம் கொம்யூனில் 26ம் தேதி கிராம சபை கூட்டம்
அரியாங்குப்பம் கொம்யூனில் 26ம் தேதி கிராம சபை கூட்டம்
ADDED : ஜன 21, 2026 05:18 AM
அரியாங்குப்பம்: குடியரசு தினத்தையொட்டி, வரும் 26ம் தேதி, அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்துக்குட்பட்ட 14 பஞ்சாயத்துக்களில், கிராம சபை கூட்டம் நடக்கிறது.
இதுகுறித்து, அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் விநாயகமூர்த்தி வெளியிட்டுள்ள செய்திறிப்பு;
அரியாங்குப்பம் மேற்கு கிராம பஞ்சாயத்து, பி.சி.பி., நகர், சமுதாய நலக்கூடத்தில், வரும் 26ம் தேதி, காலை 10:00 மணி முதல் 11:00 மணி வரை கிராம சபை கூட்டம் நடக்கிறது. அதே போன்று, ராதாகிருஷ்ணன் நகர் பஞ்சாயத்து, ஆர்.கே., நகர் அருகில், வீராம்பட்டினம் செங்கழுநீர் அம்மன் கோவில், நோணாங்குப்பம் கிராம பஞ்சாயத்து, அரசு துவக்கப் பள்ளி, ஆண்டியார்பாளையம், மாரியம்மன் கோவில் அருகில், நல்லவாடு சமுதாய நலக்கூடம், டி.என்., பாளையம் சமுதாய நலக்கூடம் ஆகிய இடங்களில் கிராம சபை கூட்டம் நடக்கிறது.
இதில், பொதுமக்கள் கலந்து கொண்டு, கிராம பிரச்னைகளை அதிகாரிகளிடம் தெரிவிக்கலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

