/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மறைந்த ஓய்வு நீதிபதிக்கு இன்று அரசு மரியாதை
/
மறைந்த ஓய்வு நீதிபதிக்கு இன்று அரசு மரியாதை
ADDED : ஜன 21, 2026 05:18 AM
புதுச்சேரி: மறைந்த ஓய்வு பெற்ற நீதிபதி தாவீது அன்னுசாமி உடலுக்கு இன்று அரசு மரியாதை செலுத்தப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி, லப்போர்த் வீதியை சேர்ந்தவர் ஓய்வு பெற்றி நீதிபதி தாவீது அன்னுசாமி, 99. இவர் உடல்நலக் குறைவால் கடந்த 17ம் தேதி காலமானார்.
அவரது உடல் இன்று உப்பளம் கல்லறையில் இறுதி சடங்கு செய்யப்பட உள்ளது.
இந்நிலையில், அரசின் பல்வேறு உயர் பதிவிகள் வகித்த அவரது உடலுக்கு அரசு சார்பில், மரியாதை செலுத்த வேண்டும் என்று பல்வேறு அமைப்புகள் கோரிக்கை விடுத்திருந்தன.
அதனை அடுத்து, மறைந்த ஓய்வு பெற்ற நீதிபதி தாவீது அன்னுசாமி உடலுக்கு இன்று அரசு சார்பில், மரியாதை செலுத்தப்படும் என, சார்பு செயலர் ஹிரன் தெரிவித்துள்ளார்.

