/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மண்ணாடிப்பட்டு கொம்யூனில் 26ம் தேதி கிராம சபை கூட்டம்
/
மண்ணாடிப்பட்டு கொம்யூனில் 26ம் தேதி கிராம சபை கூட்டம்
மண்ணாடிப்பட்டு கொம்யூனில் 26ம் தேதி கிராம சபை கூட்டம்
மண்ணாடிப்பட்டு கொம்யூனில் 26ம் தேதி கிராம சபை கூட்டம்
ADDED : ஜன 23, 2026 05:13 AM
திருக்கனுார்: மண்ணாடிப்பட்டு கொம்யூன் உட்பட்ட கிராம பஞ்சாயத்துகளில் குடியரசு தினத்தையொட்டி, கிராம சபை கூட்டம் வரும் 26ம் தேதி நடக்கிறது.
ஆணையர் எழில்ராஜன் செய்திக்குறிப்பு:
உள்ளாட்சித்துறை அறிவுறுத்தலின்படி, மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயதுக்குட்பட்ட 18 கிராம பஞ்சாயத்துகளில் குடியரசு தினத்தையொட்டி, வரும் 26ம் தேதி காலை 10:00 மணி முதல் 11:30 மணி வரை கிராம சபை கூட்டம் நடக்கிறது.
அதன்படி, திருவாண்டார்கோவில் அரசு மேல்நிலைப் பள்ளி, திருபுவனை கொம்யூன் அலுவலகம், சன்னியாசிக்குப்பம், கலிதீர்த்தாள்குப்பம் (மேற்கு), மதகடிப்பட்டு, பி.எஸ்.பாளையம், சோரப்பட்டு, செல்லிப்பட்டு, சுத்துக்கேணி ஆகிய கிராமங்களுக்கு கிராம பஞ்சாயத்து அலுவலகத்தில் கிராம சபைக் கூட்டம் நடக்கிறது.
மதகடிப்பட்டுபாளையம் அரசு உயர்நிலைப் பள்ளி, கலிதீர்த்தாள்குப்பம் (கிழக்கு) திரவுபதியம்மன் கோவில் திடல், மண்ணாடிப்பட்டு ஜவஹர் பவன் வளாகம், மணலிப்பட்டு அரசு நடுநிலைப் பள்ளி, கூனிச்சம்பட்டு நாடக மேடை, திருக்கனுார் அரசு உயர்நிலைப் பள்ளி, கைக்கிலப்பட்டு அரசு தொடக்கப் பள்ளி, சந்தை புதுக்குப்பம் சமுதாய நலக்கூடம், குப்பம் மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி வளாகம் உள்ளிட்ட இடங்களில் கிராம சபை கூட்டம் நடக்கிறது
இதில், பொதுமக்கள் பங்கேற்று கிராமத்திற்கு தேவையான அடிப்படை வசதிகள், கிராம வளர்ச்சிக்கான ஆலோசனைகளை, முன்வைத்து தீர்மானமாக நிறைவேற்றலாம். அப்பணிகளை செய்ய தேவையான கருத்துரு அரசுக்கு அனுப்பப்பட்டு, நிதி பெற்று நடவடிக்கை மேற்கொள்ளப் படும்.

