தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மண்ணாடிப்பட்டு கொம்யூனில் நாளை கிராம சபை கூட்டம்

மண்ணாடிப்பட்டு கொம்யூனில் நாளை கிராம சபை கூட்டம்

மண்ணாடிப்பட்டு கொம்யூனில் நாளை கிராம சபை கூட்டம்


ADDED : ஜன 25, 2025 05:34 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 25, 2025 05:34 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருக்கனுார் : மண்ணாடிப்பட்டு கொம்யூனில் குடியரசு தினத்தையொட்டி, கிராம சபை கூட்டம் நாளை நடக்கிறது.

ஆணையர் எழில்ராஜன் செய்திக்குறிப்பு:

உள்ளாட்சித்துறை அறிவுறுத்தலின்படி, மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயதுக்குட்பட்ட 18 கிராம பஞ்சாயத்துகளில் குடியரசு தினத்தை முன்னிட்டு, நாளை (26ம் தேதி) காலை 10:00 மணி முதல் 11:30 மணி வரை கிராம சபை கூட்டம் நடக்கிறது.

அதன்படி, திருவாண்டார்கோவில், சன்னியாசிக்குப்பம், மதகடிப்பட்டு, கலிதீர்த்தாள்குப்பம் (மேற்கு), பி.எஸ்.பாளையம், சோரப்பட்டு, செல்லிப்பட்டு, சுத்துக்கேணி, மதகடிப்பட்டுபாளையம், திருபுவனை, கலிதீர்த்தாள்குப்பம் (கிழக்கு), மண்ணாடிப்பட்டு, மணலிப்பட்டு, கூனிச்சம்பட்டு, திருக்கனுார், கைக்கிலப்பட்டு, சந்தை புதுக்குப்பம், குப்பம் உள்ளிட்ட கிராமங்களில் கிராம சபை கூட்டம் நடக்கிறது.

இதில், பொதுமக்கள் பங்கேற்று கிராமத்திற்கு தேவையான அடிப்படை வசதிகள், கிராம வளர்ச்சிக்கான ஆலோசனைகளை, கூட்டத்தில் முன்வைத்து தீர்மானமாக நிறைவேற்றலாம்.

அப்பணிகளை செய்ய தேவையான கருத்துரு அரசுக்கு அனுப்பப்பட்டு, நிதி பெற்று நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அதில், கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us