தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மயானக் கொள்ளை உற்சவம்

 மயானக் கொள்ளை உற்சவம்

 மயானக் கொள்ளை உற்சவம்


ADDED : பிப் 28, 2026 04:57 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 28, 2026 04:57 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பாகூர்: கிருமாம்பாக்கம் அடுத்த சுள்ளியாங்குப்பம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் 59ம் ஆண்டு மயானக்கொள்ளை உற்சவம் கடந்த 23ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. 24ம் தேதி ஊரணி பொங்கல், வீதியுலா நடந்தது. தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிேஷகம், ஆராதனை, வீதியுலா நடந்தது.

மயானக் கொள்ளை உற்சவத்தையொட்டி நேற்று காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. மாலை மயானக்கொள்ளை உற்சவம் நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

சிறப்பு அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தார். இன்று (28ம் தேதி) மஞ்சள் நீர் உற்சவம், இரவு ஊஞ்சல் உற்சவம் நடக்கிறது. நாளை 1ம் தேதி காலை 7:00 மணிக்கு தேர் திருவிழா நடக்கிறது. ஏற்பாடுகளை நிர்வாக குழுவினர் மற்றும் கிராம மக்கள் செய்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us