ADDED : மார் 08, 2024 06:43 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாகூர் : மூ.புதுக்குப்பம் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் மயானக்கொள்ளை திருவிழா நடந்தது.
கிருமாம்பாக்கம் அடுத்த மூ.புதுக்குப்பம் கிராமத்தில் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவில், மயனாக்கொள்ளை திருவிழா கடந்த 5ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.
தொடர்ந்து சாகை வார்த்தல் நடந்தது. நேற்று முன்தினம் மாலை 5:00 மணிக்கு புதுக்குப்பம் சுடுகாட்டில் மயானக்கொள்ளை திருவிழா நடந்தது.
இரவு சிறப்பு அலங்காரத்தில் அம்மன் வீதியுலா நடந்தது.

