ADDED : செப் 13, 2026 07:42 PM

புதுச்சேரி: புதுச்சேரி கடற்கரையில், ரோட்டரி கிளப் ஆப் பாண்டிச்சேரி மெரினா சார்பில், பசுமை விழிப்புணர்வு ‘மினி’ மாரத்தான் போட்டியை கவர்னர் கைலாஷ்நாதன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
ரோட்டரி கிளப் ஆப் பாண்டிச்சேரி மெரினா சார்பில், பசுமை மற்றும் சுற்றுச்சூழலை காக்கும் வகையில் விழிப்புணர்வு ‘மினி’ மாரத்தான் போட்டி நேற்று நடந்தது.
கடற்கரை சாலை, காந்தி திடலில் துவங்கிய போட்டியை கவர்னர் கைலாஷ்நாதன் கொடி அசைத்து துவக்கி வைத்தார்.
ரோட்டரி மாவட்ட கவர்னர் வைத்தியநாதன், ஜோதி கண் மருத்துவமனை நிறுவனர் வனஜா வைத்தியநாதன், துணை கவர்னர் தேவிகா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். போட்டியில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
கடற்கரை சாலை காந்தி திடலில் துவங்கிய போட்டி, எஸ்.வி.பட்டேல் சாலை, அஜந்தா சிக்னல், அண்ணா சாலை, புஸ்சி வீதி வழியாக மீண்டும் கடற்கரையை வந்தடைந்தது.
போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு சுழற்கோப்பை மற்றும் பங்கேற்ற அனைவருக்கும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.
ஏற்படுகளை ரோட்டரி கிளப் ஆப் பாண்டிச்சேரி மெரினா தலைவர் வேல்முருகன், செயலாளர் ஹேமசந்திரன், பொருளாளர் விஜயன் மற்றும் கிளப் உறுப்பினர்கள் செய்திருந்தனர்.
