ADDED : செப் 13, 2026 07:42 PM

புதுச்சேரி: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, புதுச்சேரியில் குண்டு மல்லி, முல்லை அரும்பு பூக்களின் விலை அதிகரித்து காணப்பட்டது.
புதுச்சேரி, நேரு வீதி, பெரிய மார்க்கெட்டில் உள்ள பூ மார்க்கெட்டிற்கு, உள்ளூர் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்த பூக்கள் கொண்டு வரப்பட்டு, விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இன்று (1 விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, பூக்களின் விலை நேற்று வழக்கத்தை விட அதிகரித்து காணப்பட்டது. அதன்படி, குண்டு மல்லி கிலோ ரூ.1500; முல்லை அரும்பு ரூ.1200; என விற்பனையானது.
வெள்ளை சாமந்தி பூ ரூ.400; குஷ்பு சாமந்தி ரூ.600; பன்னீர் ரோஸ் ரூ.400; என, விற்பனை செய்யப்பட்டது. இதில், ரோஸ் ஓசூரில் இருந்தும் குண்டுமல்லி, அரும்பு, சாமந்தி பூக்கள் திண்டிவனம், விழுப்புரம் பகுதிகளில் இருந்தும் விற்பனைக்கு வருவதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
