ADDED : செப் 13, 2026 07:34 PM
புதுச்சேரி: குடிபோதையில் பொது மக்களிடம் தகராறில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
காட்டேரிக்குப்பம் அடுத்த லிங்கா ரெட்டிப்பாளையம் சாலை சந்திப்பு அருகே வாலிபர் ஒருவர், குடிபோதையில் அவ்வழியாக செல்லும் பொதுமக்களிடம் தகராறில் ஈடுபட்டு வருவதாக காட்டேரிக்குப்பம் போலீசாருக்கு தகவல் வந்தது.
இதையடுத்து, போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, போதையில் பொதுமக்களிடம் தகராறில் ஈடுபட்ட நபரை பிடித்து விசாரித்தனர். அவர் வானுார், கொந்தமூர், பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த அஜித், 24; என்பது தெரியவந்தது. இதையடுத்து, அவர் மீது குடிபோதையில் தகராறு செய்ததாக வழக்குப்பதிந்து, போலீசார் கைது செய்தனர்.
இதேபோல, குமாராப்பாளையம் சாலை சந்திப்பில் குடிபோதையில் தகராறில் ஈடுபட்ட அதே கிராமத்தை சேர்ந்த பாண்டியன், 43; திருக்கனுார் கடை வீதியில், தகராறில் ஈடுபட்ட திருக்கனுாரை சேர்ந்த விஷ்ணுபிரசாத், 33; ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
