ADDED : செப் 13, 2026 07:34 PM
புதுச்சேரி: வேலைக்கு செல்லாததை அக்கா கண்டித்ததால் மனமுடைந்த வாலிபர் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மூலக்குளம், ஜெ.ஜெ. நகர், 5வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் வெங்கடேசபெருமாள், 44; ஆட்டோ டிரைவர். இவரது மனைவி மஞ்சுளா கடந்த 2013ம் ஆண்டு இறந்து விட்டதால், தனது 2 மகள்கள் மற்றும் மகனுடன் வசித்து வருகிறார். இவரது மகன் பிரகாஷ், 18; ஐ.டி.ஐ., முடித்துவிட்டு, வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு பிரகாஷ், வீட்டிற்கு வந்து சாப்பாடு கேட்டபோது, அவரது அக்கா தனலட்சுமி, வேலைக்கு செல்லாமல் ஏன் சாப்பிட வருகிறாய் என கேட்டு சாப்பாடு தர மறுத்துள்ளார். இதனால், மனமுடைந்த பிரகாஷ் வீட்டில் மாடியில் உள்ள அறையில் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து வெங்கடேசபெருமாள் அளித்த புகாரின் பேரில், ரெட்டியார்பாளையம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
