/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
எம்.டி., எம்.எஸ்., இடங்கள் உயர்த்த 'கிரீன் சிக்னல்'
/
எம்.டி., எம்.எஸ்., இடங்கள் உயர்த்த 'கிரீன் சிக்னல்'
எம்.டி., எம்.எஸ்., இடங்கள் உயர்த்த 'கிரீன் சிக்னல்'
எம்.டி., எம்.எஸ்., இடங்கள் உயர்த்த 'கிரீன் சிக்னல்'
ADDED : நவ 23, 2024 05:42 AM
புதுச்சேரி : அரசு மருத்துவ கல்லுாரியில் முதுநிலை மருத்துவ இடங்களை உயர்த்துவதற்கான என்.ஓ.சி., வழங்க கவர்னர், முதல்வர் உத்தரவிட்டுள்ளனர்.
புதுச்சேரி அரசு மருத்துவ கல்லுாரியில் உள்ளது. இங்கு ஆண்டிற்கு 180 மாணவர்கள் எம்.பி.பி.எஸ்., முடித்து வெளியே வருகின்றனர். இளநிலை மருத்துவ படிப்பு மட்டுமின்றி எம்.டி., எம்.எஸ்., உள்ளிட்ட மருத்துவ படிப்புகளையும் அதிகரிக்க கல்லுாரி நிர்வாகம் முயற்சி எடுத்து வருகின்றது.
ஆனால், அதற்கான தடையில்லா சான்றிதழை, புதுச்சேரி சுகாதார துறை வழங்கததால் அடுத்தாண்டு 30 முதுநிலை மருத்துவ படிப்புகளை புதுச்சேரி மாணவர்கள் இழக்க உள்ளதாக பெற்றோர் சங்கங்கள் குற்றம்சாட்டி, கவர்னர், முதல்வருக்கு புகாரும் அனுப்பினர்.
இது தொடர்பாக தினமலர் நாளிதழில் நேற்று செய்தி வெளியான நிலையில் அரசு மருத்துவ கல்லுாரியின் முதுநிலை மருத்துவ இடங்களை உயர்த்துவதற்கான என்.ஓ.சி., வழங்க சுகாதார துறைக்கு உத்தரவிட்டுள்ளனர். எனவே ஓரிரு தினங்களில் இதற்கான அறிவிப்பு வெளியாகிறது.
இதற்கிடையில் முதுநிலை மருத்துவ இடங்களை உயர்த்துவதற்கான மருத்துவ கவுன்சில் கால அவகாசம் நேற்றுடன் முடிந்த நிலையில், அடுத்த மாதம் வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
எனவே, சுகாதார துறையின் என்.ஓ.சி., புதுச்சேரி பல்கலைக்கழக என்.ஓ.சி., சான்றிதழ்களுடன் தேசிய மருத்துவ கவுன்சிலுக்கு விண்ணப்பிக்க புதுச்சேரி அரசு மருத்துவ கல்லுாரிக்கு போதுமான கால அவகாசம் உள்ளதால் அனைத்து சிக்கல்களும் முடிவுக்கு வந்துள்ளது.