/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
போலீஸ் ஸ்டேஷனில் குறைதீர்வு நாள் கூட்டம்
/
போலீஸ் ஸ்டேஷனில் குறைதீர்வு நாள் கூட்டம்
ADDED : பிப் 17, 2025 06:08 AM

பாகூர்,; கிருமாம்பாக்கம் தெற்கு போக்குவரத்து போலீஸ் நிலையத்தில் மக்கள்குறை தீர்வு நாள் கூட்டம் நடந்தது.
இன்ஸ்பெக்டர் தன்வந்திரி, சப் இன்ஸ்பெக்டர்கள் பாஸ்கரன் பங்கேற்று குறைகளை கேட்டறிந்தனர். கூட்டத்தில், பொது மக்கள், ஆட்டோ ஓட்டுனர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு, குறைகளை தெரிவித்தனர். அதில், புதுச்சேரி - கடலுார் சாலையில் முக்கிய சந்திப்புகளில் போலீசாரை நியமித்து போக்குவரத்தை ஒழுங்கு படுத்திட வேண்டும். சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகளால் பலர் விபத்தில் சிக்கி வருகின்றனர்.
அதிவேகமாக செல்லும் வாகன ஓட்டிகளின் மீதும், அதிக ஒலி எழுப்ப கூடிய ஏர் ஹாரன்கள், சைலன்ஸ் பொறுத்தப்பட்ட வாகனங்களின் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வலியுறுத்தப்பட்டது. இது தொடர்பாக, உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்த போலீசார், தலைக்கவசம் அணிவது, சாலை விதிகள் குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

