/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மளிகை கடை உரிமையாளரிடம் ரூ.13 லட்சம் மோசடி
/
மளிகை கடை உரிமையாளரிடம் ரூ.13 லட்சம் மோசடி
ADDED : ஜூலை 14, 2025 03:53 AM
காரைக்கால் : காரைக்காலில் தங்க நகை பார்சல் வந்துள்ளதாக கூறி மளிகை கடை உரிமையாளரிடம் ரூ.13லட்சம் மோசடி செய்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
காரைக்கால் நிரவி பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்த சிவக்குமார். இவர் மளிகை கடை நடத்தி வருகிறார். இவரை தொடர்பு கொண்ட மர்ம நபர்கள் சிவக்குமார் பெயருக்கு ரூ.50 லட்சம் மதிப்புள்ள தங்க நகை வெளி நாட்டில் இருந்து பார்சல் வந்துள்ளதாகவும், அதை பெறுவதற்கு ரூ.13 லட்சம் பணம் கட்ட வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.
இதை நம்பி சிவக்குமார், மர்ம நபர்களுக்கு ஆன்லைன் மூலம் ரூ.13 லட்சம் அனுப்பி வைத்துள்ளார். அதன் பிறகு அவர்களை தொடர்பு கொண்டபோது மொபைல் போன் ஆப் செய்யப்பட்டுள்ளது. இதனால் தான் ஏமாற்றப்பட்டது தெரிந்து அதிர்ச்சியடைந்தார்.
இது குறித்து நேற்று முன்தினம் நடந்த மக்கள் மன்ற குறை கேட்பு முகாமில் பங்கேற்ற டி.ஐ.ஜி., சத்திய சுந்தரத்திடம் புகார் அளித்தார். இதன் பேரில் நிரவி போலீசார் வழக்குப் பதிந்து மோசடி நபர்களை தேடிவருகின்றனர்.