
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: ரெட்டியார்பாயைம், புதுநகரை சேர்ந்தவர் ஷாருக்கான், 27; ரவுடியான இவர் மீது 2 கொலை, வழிப்பறி, வெடிகுண்டு வீச்சு, அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.
தற்போது, காலாப்பட்டு மத்திய சிறையில் உள்ள ரவுடி ஷாருக்கான் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ய, கலெக்டக்கு ரெட்டியார்பாளையம் போலீசார் பரிந்துரை செய்திருந்தார்.
இதையடுத்து, கலெக்டர் குலோத்துங்கன் உத்தரவின் பேரில், ரவுடி ஷாருக்கான் மீது போலீசார் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து, அதற்கான உத்தரவை காலாப்பட்டு சிறைத்துறை அதிகாரிகளிடம் வழங்கினர்.