தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/மனநல காப்பகத்தில் தாக்குதல்வாலிபருக்கு ‘குண்டாஸ்’

மனநல காப்பகத்தில் தாக்குதல்வாலிபருக்கு ‘குண்டாஸ்’

மனநல காப்பகத்தில் தாக்குதல்வாலிபருக்கு ‘குண்டாஸ்’


UPDATED : அக் 08, 2026 01:23 AM

ADDED : அக் 08, 2026 01:19 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 08, 2026 01:23 AM ADDED : அக் 08, 2026 01:19 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கடலுார்: போதை மீட்பு மற்றும் மனநல காப்பகத்தில் தாக்குதல் நடத்திய வாலிபர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது.

கடலுார் ஏ.எல்.சி., பகுதியில் கருடா போதை மீட்பு மற்றும் மனநல காப்பகம் உள்ளது. புதுப்பாளயைத்தை சேர்ந்த அஞ்சன்ராம் 23: மற்றும் சூர்யா 27: ஆகியோர், அந்த மனநல காப்பகத்தில் சேர்ந்து சிகிச்சை பெற்று டிஸ்சார்ஜ் ஆகினர்.

இந்நிலையில், கடந்த 19ம் தேதி அஞ்சன்ராம், சூர்யா இருவரும், மனநல காப்பக உரிமையாளர் சுதர்சனாவை ஆபாசமாக திட்டி தாக்கினர். மேலும், வீட்டு ஜன்னல் கண்ணாடி மற்றும் காரை உடைத்து சேதப்படுத்தினர்.

இதுகுறித்த புகாரின் பேரில் கடலுார் புதுநகர் போலீசார் வழக்கு பதிந்து, அஞ்சன்ராம், சூரியா இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில், அஞ்சன்ராமின் குற்ற நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு, எஸ்.பி., விவேகானந்த சுக்லா பரிந்துரையை ஏற்று, அவரை குண்டர் சட்டத்தில் ஓராண்டு சிறையில் அடைக்க கலெக்டர் சிபி ஆதித்ய செந்தில்குமார் உத்தரவிட்டார்.

அதன்படி அஞ்சன்ராம், குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us