தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/என்.எல் .சி.,யில் நீராவி குழாய் வெடித்து 4 தொழிலாளர்கள் படுகாயம்

என்.எல் .சி.,யில் நீராவி குழாய் வெடித்து 4 தொழிலாளர்கள் படுகாயம்

என்.எல் .சி.,யில் நீராவி குழாய் வெடித்து 4 தொழிலாளர்கள் படுகாயம்


UPDATED : அக் 08, 2026 04:44 AM

ADDED : அக் 08, 2026 01:19 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 08, 2026 04:44 AM ADDED : அக் 08, 2026 01:19 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நெய்வேலி: என்.எல்.சி., இரண்டாம் அனல்மின் நிலையத்தில் பாய்லர் அருகே நீராவி குழாய் வெடித்ததில் 4 தொழிலாளர்கள் படுகாயமடைந்தனர்.

நெய்வேலி என்.எல்.சி.,யில் நான்கு அனல்மின் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. அதில், தலா 210 மெகாவாட் மின்உற்பத்தி திறன்கொண்ட 7 மின்உற்பத்தி நிலையங்கள் செயல்பட்டு வருகிறது. இதில் 6 வது யூனிட்டில் செயல்பட்டு வந்த பாய்லர் அருகே இருந்த நீராவி குழாய் நேற்று மாலை திடீரென வெடித்து, நீராவி பீய்ச்சி அடித்தது.

அதில், அங்கு வேலை செய்த கொண்டிருந்த ஊத்தாங்காலை சேர்ந்த செல்வகுமார் மகன் நந்தகுமார், 35; கொள்ளிருப்பு அம்பேத்கர் நகர் ராமலிங்கம் மகன் ராமகிருஷ்ணன், 35; ஆதண்டார்கொல்லை கோவிந்தசாமி மகன் வேல்முருகன், 51; முதனை ரவிச்சந்திரன் மகன் லோகேஷ், 23; ஆகியோர் தீக்காயம் அடைந்தனர்.

அவர்களை சக ஊழியர்கள் மீட்டு என்.எல்.சி., மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி அளித்த பின் மேல்சிகிச்சைக்காக சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப் பட்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us