/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அப்பா பைத்தியம் சுவாமி கோவிலில் குருபூஜை: முதல்வர் வழிபாடு
/
அப்பா பைத்தியம் சுவாமி கோவிலில் குருபூஜை: முதல்வர் வழிபாடு
அப்பா பைத்தியம் சுவாமி கோவிலில் குருபூஜை: முதல்வர் வழிபாடு
அப்பா பைத்தியம் சுவாமி கோவிலில் குருபூஜை: முதல்வர் வழிபாடு
ADDED : மே 12, 2025 02:09 AM

புதுச்சேரி: கோரிமேடு அப்பா பைத் தியம் சுவாமி கோவிலில் நேற்று நடந்த குருபூஜையில் முதல்வர் ரங்கசாமி பங்கேற்று வழிபாடு செய்தார்.
கோரிமேடு, வீமக்கவுண்டன் பாளையத்தில் முதல்வர் ரங்கசாமியால் கட்டப்பட்ட அப்பா பைத்தியம் சுவாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில், அப்பா பைத்தியம் சுவாமி பிறந்த நாளை முன்னிட்டு குருபூஜை நேற்று நடந்தது.
விழாவையொட்டி, காலை திருவிளக்கு, புனித நீர் வழிபாடு, ஐங்கரன் வழிபாடு, செந்தமிழில் வேள்வி, நிறை வேள்வி, சிறப்பு திருமஞ்சனம், பேரொளி வழிபாடு நடந்தது.
குருபூஜை விழாவில், முதல்வர் ரங்கசாமி பங்கேற்று, அப்பா பைத்தியம் சுவாமிக்கு பூஜைகள் செய்து, வழிபாடு நடத்தினார். பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார்.
இதில், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், என்.ஆர்.காங்., பிரமுகர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.