/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கம்பளி ஞான தேசிக சுவாமி மடத்தில் குருபூஜை விழா
/
கம்பளி ஞான தேசிக சுவாமி மடத்தில் குருபூஜை விழா
ADDED : டிச 31, 2024 05:57 AM

புதுச்சேரி: தட்டாஞ்சாவடி, கம்பளி ஞான தேசிக சுவாமிகளின் 151ம் ஆண்டு மற்றும் சுவாமி கீதானந்த கிரி குரு மகராஜ் 31ம் ஆண்டு குருபூஜை விழா நேற்று நடந்தது.
நிகழ்ச்சிக்கு, மீனாட்சி தேவி பவனானி தலைமை தாங்கினார். டாக்டர் ஆனந்த பாலயோகி கிரி முன்னிலை வகித்தார். இதையொட்டி, காலை 6:05 மணிக்கு கம்பளி சுவாமி மடத்தில் கொடி ஏற்றமும், 7:30 மணிக்கு பக்தி பாடல்கள், பஜனைகள், கீர்த்தனைகள், அபிேஷகம், ஆராதனை நடந்தது.
மதியம் 12:00 மகா தீபாராதனை, பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை யோகஞ்சலி நாட்டியாலயா மேலாளர் சண்முகம், கஜேந்திரன், செல்வகுமார் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.இதில், திரளான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.