நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வில்லியனுார்: வில்லியனுார், ஒதியம்பட்டு அடுத்த தமிழக பகுதியான சந்திக்குப்பம் கிராமத்தில் சற்குரு நவபாஷான சித்தர் ஜீவ பீடத்தில், குரு பூஜை விழா நடந்தது.
விழாவை முன்னிட்டு நவபாஷான சித்தர் பீடத்திற்கு நவகிரக பூ மாலைகள் அணிவித்து காலை 6:45 முதல் 7:45 மணி வரை கோ பூஜை, மகா கணபதி ஹோமம் நடந்தது.காலை 9:00 மணியளவில் சித்தர் ஜீவ பீடத்தில் மூலிகை அபிேஷகம் மற்றும் 108 சங்கு அபிேஷகம் நடந்தது. பகல் 11:30 மணியளவில் மகா தீபாராதனை, இரவு 7:00 மணிக்கு சுவாமி வீதியுலா நடந்தது.