/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அகஸ்திய மகரிஷி கோவிலில் இன்று குரு பூஜை
/
அகஸ்திய மகரிஷி கோவிலில் இன்று குரு பூஜை
ADDED : டிச 09, 2025 05:54 AM
அரியாங்குப்பம்: லோபாமுத்ரா சமேத அகஸ்திய மகரிஷி மற்றும் பகுளாதேவி சமேத காகபுஜண்ட மகரிஷி கோவிலில், 21ம் ஆண்டு குருபூஜை, இன்று (9ம் தேதி) நடக்கிறது.
அரியாங்குப்பம், காக்காயந்தோப்பில் உள்ள கோவிலில், குருபூஜை விழாவையொட்டி, இன்று (9ம் தேதி) காலை 7:00 மணிக்கு மஹா குரு ேஹாமம், மஹா கணபதி ஹோமம் மற்றும் நவகிரக ேஹாமம் நடக்கிறது.
அதனை தொடர்ந்து, காலை 10:00க்கு முக்கிய நிகழ்வான, குருபூஜையும், 11:50 மணிக்கு மகா தீபாரதனை நடக்கிறது.
தொடர்ந்து, மதியம் 12:00 மணிக்கு அன்னதானமும், மாலை 6:00 மணியளவில் லோபாமுத்ரா சமேத அகஸ்திய மகரிஷி சுவாமிகள் வீதியுலா நடக்கிறது. தொடர்ந்து, 6:30 மணிக்கு அகஸ்தியர் போற்றி மஹா அர்ச்சனையும், இரவு 8:30 மணிக்கு மஹா தீபாராதனை நடக்கிறது .
நிகழ்ச்சி ஏற்பாடுகளை, சிவசச்சிதானந்தா மகரிஷி மற்றும் அகஸ்திய பக்தர்கள் செய்து வருகின்றனர்.

