ADDED : ஜூலை 13, 2025 12:25 AM
பாகூர் : கிருமாம்பாக்கம் அருகே பெட்டி கடையில் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
கிருமாம்பாக்கம் அடுத்த காட்டுகுப்பம் பள்ளி கூட வீதியில் உள்ள கடைகளில் பான்மசாலா, குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், சப் இன்ஸ்பெக்டர் குப்புசாமி தலையிலான போலீசார், அங்கு சென்று கடைகளில் ஆய்வு செய்தனர். அப்போது, ஒரு கடையில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்வது தெரியவந்தது.
இதையடுத்து அங்கிருந்த, 9 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான 7 கிலோ புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக, அதே பகுதியை சேர்ந்த விஜயகுமார் சிங் 48, மற்றும் வார்க்கால் ஓடையை சேர்ந்த வீரன் 54 ஆகியோர் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.