நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாகூர்:
பாகூர் போலீஸ் ஏட்டு மணிகண்டன் நேற்று முன்தினம் இரவு ரோந்து சென்றார்.
சோரியாங்குப்பம் அரசு நடு நிலைப்பள்ளி அருகே ஒருவர், பையில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் வைத்து விற்பதாக தகவல் கிடைத்தது. அங்கு சென்ற போலீசார் அங்கு சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்றிருந்த நபரை பிடித்து விசாரித்தனர்.
அதில், அவர் அதே பகுதியை சேர்ந்த அமுதன் 48; என்பதும் சிறுவர்களுக்கு புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து, அவரை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து 1,400 ரூபாய் மதிப்பிலான புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். அவர் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

