நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : கருவடிக்குப்பத்தில் விற்பனைக்காக கடையில் வைத்திருந்த தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
லாஸ்பேட்டை போலீசார் நேற்று முன்தினம் ரோந்து சென்ற போது கருவடிக்குப்பம், சாராயக்கடை எதிரேயுள்ள கடையில் போலீசார் சோதனை செய்தபோது, ஆன்ஸ், கூல் லீப், சிகரெட் உள்ளிட்ட குட்கா பொருட்கள் 18 வயதிற்கு கீழே உள்ளவர்களுக்கு விற்பனை செய்வது தெரியவந்தது.
இதையடுத்து, கடையில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த ரூ.1,200 மதிப்பிலான குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், குட்கா பொருட்களை விற்பனை செய்ததாக, கடையின் உரிமையாளர் ஸ்ரீதர், 37; மீது வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.