நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : உருளையன்பேட்டை, மறை மலை அடிகள் சாலை தனியார் ஒயின்ஷாப் அருகேயுள்ள கடையில் போலீசார் சோதனை செய்தபோது, தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்வது தெரியவந்தது.
இதையடுத்து, கடையில் விற்பனைக்கு வைக்கப்பட் டிருந்த ரூ.39 ஆயிரம் மதிப்பிலான குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். கடையின் உரிமையாளர் தயாளன், 54 ; மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.