நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாகூர்: கரையாம்புத்துார், பழைய சாராயக்கடை அருகே உள்ள பெட்டி கடையில், குட்கா பொருட்கள் விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
கரையாம்புத்துார் சிறப்பு நிலை தலைமை காவலர் கலைவாணன் மற்றும் போலீசார், அங்கு சென்று பெட்டி கடையில் சோதனை நடத்தினர். அ தில், ஹான்ஸ், பிளாக் சிகரெட், கூலிப் உள்ளிட்ட பொருட்களை விற்றது தெரியவந்தது. அங்கிருந்த 5,158 ரூபாய் மதிப்பிலான குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக, கடை உரிமையாளர் ஜான்சன் ஜெயக்குமார், 49, மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.

