நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: உருளையன்பேட்டை சிறப்பு நிலை உதவி சப் இன்ஸ்பெக்டர் ராஜசேகரன் மற்றும் போலீசார் கடந்த 10ம் தேதி ரோந்து சென்றனர். அப்போது, கடலுார் சாலையில் உள்ள பெட்டிக்கடையில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்வதாக தகவல் வந்தது.
இதனையடுத்து போலீசார் அந்த கடைக்கு சென்று சோதனை நடத்தினர். தடை செய்யப்பட்ட ரூ. 5 ஆயிரம் மதிப்பிலான குட்கா பொருட்கள் விற்பனைக்கு வைக்கத்திருப்பது தெரியவந்தது.
குட்கா பொருட்களை பறிமுதல் செய்த போலீசார், கடை உரிமையாளர் வாணரப்பேட்டையை சேர்ந்த ராஜி, 40, என்பவர் மீது வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனர்.

